ஆதிச் சுவடு (Adhi Suvadu) kapak görseli

ஆதிச் சுவடு (Adhi Suvadu)

ஆதிச் சுவடு (Adhi Suvadu)

Yazan: AdithiyanRushes
Şimdi ücretsiz dinle, üyelik gerekmez

Season's Savings | £0.99/mo for 3 months

£5.99/mo after 3 months - terms apply. Cancel monthly
காலத்தின் பெருவெளியில் நாம் தவறவிட்ட வேர்களைத் தேடி ஒரு தமிழ் ஒலிப்பயணம் — ‘ஆதிச் சுவடு’. கீழடி, பொருநை நாகரிகங்களின் தொன்மை முதல் சங்கப் பாடல்களின் இலக்கியச் செழுமை வரை நம் தமிழ் மொழியின் ஆழத்தையும் தனித்துவத்தையும் பேசும் அறிமுகப் பதிவு இது. வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவியாக இல்லாமல், வாழ்வியலையே இலக்கணமாக வகுத்த நம் தாய்மொழியின் பெருமைகளை உணர்ந்து கொண்டாடும் ஒரு தொடக்கப் புள்ளி.AdithiyanRushes Language Learning
  • ஆதிச் சுவடு 01: எழுத்ததிகாரம் – ஒலியின் தோற்றமும் வரிவடிவமும்
    27 Oct 2026

    ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மொழியின் ஒலிகளை இயற்கை அறிவின் துணை கொண்டு துல்லியமாக அளந்து வகுத்துக் கொடுத்த மாபெரும் இலக்கணப் புதையல் தொல்காப்பியம்.

    நமது 'ஆதிச் சுவடு' தொடரின் இந்த முதல் பதிவில், தமிழின் அடித்தளமாக விளங்கும் 'எழுத்ததிகாரம்' குறித்த ஆழமான பார்வையை முன்வைக்கிறோம்:

    • முதல் எழுத்துகள்: உயிரும் உடலும் போல ஒன்றிணைந்து இயங்கும் உயிரெழுத்துகள் (12) மற்றும் மெய்யெழுத்துகள் (18).

    • இனப்பாகுபாடு: ஓசையின் தன்மைக்கு ஏற்ப அமையும் வல்லினம், மெல்லினம், இடையினம்.

    • மாத்திரை: கண் இமைக்கும் நொடியையும் விரல் நொடி பொழுதையும் வைத்து ஒலியின் கால அளவை வரையறுத்த தமிழனின் வியக்கத்தகு காலக் கணிப்பு.

    • பிறப்பியல்: மார்பு, கழுத்து, தலை, நாக்கு மற்றும் அண்ணத்தின் அசைவுகளால் ஒலிகள் பிறக்கும் உடற்கூறியல் நுட்பம்.

    வடசொல் கலப்பின்றி, எளிய நடையில் தமிழின் இயற்கை இலக்கணத்தை உணர்ந்து கொள்ள உடனே கேளுங்கள்!

    பதிவு பிடித்திருந்தால் விருப்பத்தைப் பதிவிட்டு, உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். புதிய பதிவுகளைத் தொடர்ந்து கேட்க மறக்காமல் Follow செய்து கொள்ளுங்கள்.

    வேர்களை அறிவோம்… சுவடுகள் தொடரும்!

    Daha fazlasını göster Daha Az Göster
    7 dk.
adbl_web_anon_alc_button_suppression_t1
Henüz yorum yok